Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 01 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், பொரூசியா மொச்சென்கிளெட்பாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் தோற்றது.
பொரூசியா மொச்சென்கிளெட்பா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹன்னெஸ் வொல்ஃப் பெற்றிருந்தார்.
இதேவேளை, எஃப்.சி கொலோனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றது. பயேர்ண் மியூனிச் சார்பாக, தோமஸ் மல்லர், சேர்ஜி நர்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எஃப்.சி கொலோன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் ட்ரெக்ஸ்லர் பெற்றிருந்தார்.
இந்நிலையில், அர்மினியாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மற்ஸ் ஹம்மெல்ஸ் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
41 minute ago
1 hours ago