Shanmugan Murugavel / 2020 நவம்பர் 08 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
பயேர்ண் மியூனிச் சார்பாக, டேவிட் அலபா, றொபேர்ட் லெவன்டோஸ்கி, லெரோய் சனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக, மார்கோ றொய்ஸ், எர்லிங் பிறோட் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நடைபெற்ற பிறைபேர்க்குடனான போட்டியில் ஆர்.பி லெய்ப்ஸிக் வென்றது. ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக, இப்ராஹிம் கொனட்டே, மார்செல் சபிட்ஸர், ஏஞ்செலினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago