Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு கடத்தப்பட்டுள்ள உலகின் முதற்தர டென்னிஸ் வீரர், நொவெக் ஜொகோவிச்சுக்கு, அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள திறந்த டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்கலாமென அந்நாட்டின் பிரதமர் ஸ்கோட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைய, நாடுகடத்தப்பட்ட நபர் ஒருவருக்கு 3 வருடங்கள் செல்லும் வரை மீண்டும் அந்த நாட்டுக்குள் வருவதற்கு இடமில்லை.
எனினும், உரிய முறையின் படி விசாவுக்கு விண்ணப்பம் செய்தால், 3 வருடங்களுக்கு முன்னரே அவருக்கான விசா கிடைக்கும் வாய்ப்பு உள்ளதென பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் நேற்று( 17) ஆரம்பமான திறந்த டென்னிஸ் போட்டியில் ஜொகோவிச் இன்மையால் ஸ்பெய்னின் ரபாயல் நடால் முன்னணி வகிக்கலாம் என டென்னிஸ் ரசிகர்கள் ஆருடம் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .