Shanmugan Murugavel / 2016 நவம்பர் 15 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமருந்துப் பாவனை தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளும் கட்டார் ஆய்வுகூடத்தை, ஊக்க மருந்துக்கெதிரான உலக முகவராண்மை இடைநிறுத்தியுள்ளது. இறுக்கமான வழியுரைகளைப் பின்பற்றத் தவறியமை காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை, நவம்பர் 7ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருவதோடு, 4 மாதங்களுக்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்படுகிறது. இந்தத் தடைக்கெதிராக, 21 நாட்களுக்குள், அந்த ஆய்வுகூடம் விண்ணப்பிக்க முடியும்.
தடைக்கான நேரடியான காரணங்கள் வெளிப்படுத்தப்படாத போதிலும், மோசடி செய்தமைக்காக இது தடை செய்யப்படவில்லை எனவும், இறுக்கமான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்காமையாலேயே தடை செய்யப்படுகிறது எனவும் அறிவிக்கப்படுகிறது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago