Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க-இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் காயமடைந்த, இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிருந்தும் தென்னாபிரிக்க அணியின் ஜீன் போல் டுமினி பதவி விலகியுள்ளார்.
இவருக்குப் பதிலாக டீன் எல்கர் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டுமினி குணமடைய இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தேவைப்படும் எனவும், அவர் தொடர்ந்தும் இந்தியாவில் அணியுடன் இருந்து சிகிச்சையை பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கு டுமினி தயாராகி விடுவார் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.
தான் பந்துவீசும்போது தன்னை நோக்கி வந்த பந்து தாக்கியதிலேயே டுமினி காயமடைந்திருந்தார். எனினும், தொடர்ந்தும் அப்போட்டியில் களத்தடுப்பில் அவர் ஈடுபட்டிருந்தார். போட்டி முடிவடைந்த பின்னர் ஆராய்ந்ததிலேயே அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கமுடியாதபடி காயம் மோசமானது தெரியவந்திருந்தது.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago