2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

டியகோ சாவேஸுடன் கெல் புரூக் மோதல்

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் 63.5 கிலோகிராமுக்கும் 67 கிலோகிராமுக்கும் இடைப்பட்டவர்களுக்கான பட்டத்தை மூன்றாவது தடவை தக்க வைக்கும் பொருட்டு பெரிய பிரித்தானியாவின் கெல் புருக் எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி ஆர்ஜென்டினாவின் டியகோ சாவேஸுடன் மோதவுள்ளார். 

லண்டனில் சக நாட்டவரான பிராங்கி கவினை 29 வயதான புரூக் தோற்கடித்த ஷெபீல்டில் உள்ள மோட்டார்பொயிண்ட் அரங்கிலேயே இந்தப்போட்டி நடைபெறவுள்ளது. 

சாவேஸ் முரட்டுத்தனமான, கடினமான, நீண்ட நேரம் நிலைக்ககூடிய போட்டியாளராக இருப்பதால் கடும் போட்டியாக விளங்குவார் என புரூக் தெரிவித்துள்ளார். கடந்த ஏழு மாதங்களில் பட்டத்தை தக்க வைப்பதுக்கான மூன்றாவது போட்டி எனத் தெரிவித்துள்ள புரூக், ஆனால் நெருக்கடியான போட்டியாளர் ஒருவராக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இடைப்பட்ட உலக குத்துச்சண்டை கூட்டமைப்பு பட்டத்தை கொண்டிருக்கும் சாவேஸ், தனது 26 தொழில் முறையான போட்டிகளில் 23ஐ வெற்றி கொண்டு, புரூக்ஸின் 35 போட்டிகளில் 35 என்ற சாதனையை முறியடிக்க நம்பிக்கை கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .