2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் பந்துகள்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 19 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதிய வெளிச்சமில்லாதபோதும் போட்டிகளைத் தொடரும் பொருட்டு டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் நிறப் பந்தை அறிமுகப்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது.

கடந்த சனிக்கிழமை (17) அபுதாபியில் முடிவடைந்த இங்கிலாந்து, பாகிஸ்தான அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின்போது 25 ஓட்டங்கள் மாத்திரமே இங்கிலாந்தின் வெற்றிக்கு தேவைப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. மேற்படி மைதானத்தில் மின்னொளி  வசதிகள் இருந்தபோதும் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லையென தனதுஆதங்கத்தைத் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்ட்டீர் குக் தெரிவித்தையடுத்தே மேற்படி கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை அடுத்த மாதம் அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது மென்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

வேறு நிறப் பந்துகள் அடையாளங்காணக்கூடிய வகையில் இருந்தால், நீண்டகாலப் போக்கில் நாங்கள் மென்சிவப்பு அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறப்பந்தை பயன்படுத்தி மின்னொளி வசதியில் விளையாட முடியும் என சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். இதேவேளை மின்னொளி வசதியை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .