Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் இருந்துவந்த பாகிஸ்தான் அணி, அந்த நிலையை நேற்றுப் பறிகொடுத்தது ஒருபக்கமிருக்க, அந்த அணிக்கான இன்னொரு துரதிர்ஷ்டமும் காத்திருந்தது.
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே, முதலிடத்தை பாகிஸ்தான் அணி இழந்தது.
முதலிடத்தை அவ்வணி இழப்பதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பாக, பாகிஸ்தானின் செனட்டில், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்துக்கு வந்த பாகிஸ்தான் அணியைப் பாராட்டிக் கௌரவிப்பதற்கான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்ட பின்னர், அவ்வணி முதலிடத்தை இழந்தது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தியை, பாகிஸ்தானின் அரச வானொலி, டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து 20 நிமிடங்களில், முதலிடம் பறிபோயிருந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நிலவும் பதற்றம் காரணமாக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய டுவிட்டர் பயனர்கள், பாகிஸ்தானைக் கேலி செய்தனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago