2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டொட்டென்ஹாமை வீழ்த்திய யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 13 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருந்ததோடு, டொட்டென்ஹாம் சார்பாக ஹரி கேன் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், 69 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. 66 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லிவர்பூலும், 56 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் செல்சியும், 50 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .