Shanmugan Murugavel / 2021 ஜூன் 08 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் கோல் காப்பாளரான ஜல்லூயிஜி டொன்னருமாவின் அக்கழகத்துடனான ஒப்பந்தமானது இக்கோடைப்பருவகாலத்துடன் முடிவடைகின்றது.
இந்நிலையில், 22 வயதான டொன்னருமாவைக் கைச்சாத்திட பல கழகங்கள் போட்டியிடுகின்றன.
அந்தவகையில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு டொன்னருமா செல்வார் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதோடு, சில வேளைகளில் இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸுக்குச் செல்வார் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடன் 60 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் பெறுமதியிலான ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றில் டொன்னரும்மா இணைவதை நெருங்கி விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026