Shanmugan Murugavel / 2016 ஜனவரி 31 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம், அத்தொடரையும் அவ்வணி கைப்பற்றியுள்ளது.
ஒக்லான்டில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது. 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்திருந்தது.
துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் 83 (77), மொஹமட் ஹபீஸ் 76 (60), சப்ராஸ் அஹ்மட் 41 (50), ஷொய்ப் மலிக் 32 (27) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் அடம் மில்ன் 3, ட்ரென்ட் போலட் 2, மற் ஹென்றி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
291 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 35.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது மழை குறுக்கிட, 43 ஓவர்களில் 263 என்ற இலக்கு வழங்கப்பட்டது. அவ்வணி, 42.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்ஸன் 84 (86), மார்ட்டின் கப்டில் 82 (81), கொரே அன்டர்சன் 35 (29) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், அஸார் அலி இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதோடு, 4 பிடிகளையும் பிடித்த மார்ட்டின் கப்டில் தெரிவானார்.
இத்தொடரின் 2ஆவது போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில், இத்தொடரை நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago