Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து மன்செஸ்டர், ஓல்ட் டிராஃபோர்ட்டில் இடபெற்ற ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப்போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி, ஒருநாள் போட்டித்தொடரை 3-2 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிவெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன் தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இங்கிலாந்து அணி சார்பாக ரீஸ் டொப்லி ஒருநாள் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார். அவுஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் ஜேம்ஸ் பட்டின்சனுக்கு பதில் மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பெற்றார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, பென் ஸ்டோக்ஸ் 42 ஓட்டங்களையும், அடில் ரஷீத் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த இன்னிங்சில், மிட்செல் ஸ்டார்க்கின் அதிவேகமான பந்தொன்று மோர்கனின் தலைக்கவசத்தில் தாக்கியதில் அவர் போட்டியிலிருந்து விலகியிருந்தார்.
பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணி சார்பாக மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுக்களையும், ஜோன் ஹஸ்டிங்ஸ் 3 விக்க்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க், அஸ்தன் அகர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆரோன் பின்ச், ஜோர்ஜ் பெய்லி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 70, 41 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் வில்லி, மார்க் வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவானார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago