2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க குழாமில் இம்ரான் தாகிரும், டேனியல் பீடிட்டும் இடம்பெற்றுள்ளனர்.

பங்களாதேஷில் இடம்பெற்ற, தென்னாபிரிக்காவின் இறுதி டெஸ்ட் போட்டிக்கான குழாமிலிருந்து தாகிர் நீக்கப்பட்டிருந்ததுடன், தனது ஒற்றை டெஸ்ட் போட்டியை பீடிட், 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலேயே விளையாடியிருந்தார்.

பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அணியிலிருந்து நீக்கப்பட்ட குவான்டன் டீ கொக், இம்முறை குழாமிலேயே இடம்பெறாததுடன், அணியின் முதன்மை விக்கெட் காப்பாளராக டனி விலாஸ் இடம்பெற்றுள்ளார்.

புதிய வீரராக, இருபது-இருபது குழாமில், காயமடைந்த ரீலி ரொசோக்கு பதிலாக காயா சொண்டோ இடம்பெற்றுள்ளார். எனினும் ஒருநாள் போட்டிகளுக்கு முன் ரொசோ குணம்டைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டெம்பர் 29ஆம் திகதி தனது ஆயத்த போட்டியை டெல்லியில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணி, ஒக்டோபர் 2,5,8 ஆம் திகதிகளில் மூன்று இருபது -20 போட்டிகளிலும், பின் ஒக்டோபர் 11,14,18,22,25 ஆம் திகதிகளில் ஐந்து ஒருநாள் சர்வதேசபோட்டிகளிலும், சண்டிகார், பெங்களூர், நாக்பூர், டெல்லியில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலிலும் தென்னாபிரிக்கா பங்கேற்கவுள்ளது.

டெஸ்ட் குழாம் - ஹஷிம் அம்லா(தலைவர்), ஏபி டீவில்லியர்ஸ், டெம்பா பவுமா, ஜெ‌பி டுமினி, பவ் டுபிலிசிஸ், டீன் எல்கர், சைமன் ஹார்மர், இம்ரான் தாகிர், மோர்னே மோர்க்கல், வெரோன் பிளன்டர், டனி  பீடிட், கஜிஸ்கோ ரபடா, டேல் ஸ்டெயின், ஸ்டியான் வான் சில், டனி விலாஸ்

ஒருநாள் குழாம் - ஏபி டீவில்லியர்ஸ்(தலைவர்), கைல் அபோட், ஹஷிம் அம்லா, பர்கான் பெகாத்ரீன், குவான்டன் டி கொக், ஜெ‌பி டுமினி, பவ் டுபிலிஸ், இம்ரான் தாகிர், டேவிட் மில்லர், மோர்னே மோர்க்கல், கிறிஸ் மொரிஸ், ஆரோன் பன்கிசோ, கஜிஸ்கோ ரபடா, ரீலி ரொசோ, டேல் ஸ்டெயின்

இருபது-20 குழாம் -, பவ் டுபிலிஸ்(தலைவர்), கைல் அபோட், ஹஷிம் அம்லா, பர்கான் பெகாத்ரீன், குவான்டன் டி கொக், மேர்சண்ட் டீ லஞ்ச், ஏபி டீவில்லியர்ஸ், ஜெ‌பி டுமினி, பவ் டுபிலிஸ், இம்ரான் தாகிர், எடி லிலி. டேவிட் மில்லர், கிறிஸ் மொரிஸ், கஜிஸ்கோ ரபடா, டேவிட் வைஸ், காயா சொண்டோ

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .