2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்கத் தடை நீக்கப்பட்டது

Gopikrishna Kanagalingam   / 2017 மே 10 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதானமான கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கு, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடையை, அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சு நீக்கியுள்ளது. அரசாங்கம் விதித்த, நிலைமாற்ற அளவை அடைந்ததன் மூலமே, இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையாக கறுப்பினத்தவர்கள் வாழும் தென்னாபிரிக்காவில், அந்நாட்டு கிரிக்கெட் அணியின், போதுமான கறுப்பின வீரர்கள் இணைக்கப்படாததன் காரணமாக, விளையாட்டுத்துறை அமைச்சால், இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விளையாடும் பதினொருவரில், 6 பேர் வெள்ளையரல்லாதவர்களாக இருக்க வேண்டுமெனவும், அவர்களில் ஆகக்குறைந்தது இருவர், கறுப்பின வீரர்களாக இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான அளவை வழங்கப்பட்ட பின்னர், 29 சர்வதேசப் போட்டிகளில், தென்னாபிரிக்கா விளையாடியுள்ளது. அதன்படி, 319 விளையாடும் வீரர்களுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் 176 இடங்கள், வெள்ளையரல்லாத வீரர்களால் நிரப்பப்பட்டன. அதில் 61 வீரர்கள், கறுப்பின வீரர்களாக அமைந்தனர்.

இதன்படி, சராசரியாக ஒரு போட்டியில், 6.07 வீரர்கள், வெள்ளையரல்லாதவர்களாக இருந்தனர். இது, எதிர்பார்க்கப்பட்ட சராசரியான 6ஐ விட அதிகமாகவும். எனவே, தடை நீக்கப்பட்டுள்ளது.

கறுப்பின வீரர்களில் கஜிஸ்கோ றபடா 23 போட்டியில் விளையாடியிருந்தார். மற்றொரு கறுப்பின வீரரான அன்டிலே பெஹ்லுக்வாயோ, 18 போட்டிகளில் விளையாடினார். வெள்ளையர் அல்லாத வீரர்களில் அதிக போட்டிகளில், ஜே.பி. டுமினி விளையாடினார். அவர், 26 போட்டிகளில் விளையாடினார். ஹஷிம் அம்லா 23 போட்டிகளிலும் இம்ரான் தாஹிர் 18 போட்டிகளிலும் விளையாடினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .