2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

தடுமாறுகிறது இலங்கை

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 04 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கேப் டௌணில், கடந்த திங்கட்கிழமை (02) ஆரம்பமான இரண்டாவது போட்டியில், 507 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகின்ற இலங்கையணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவில், நான்கு விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், அஞ்செலோ மத்தியூஸ் 29 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர். கௌஷால் சில்வா 29, தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், கஜிஸ்கோ றபடா, வேர்ணன் பிலாந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.    

முன்னதாக, இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது, தமது இரண்டாவது இனிங்ஸில், விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களைப் பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இரண்டாவது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், டீன் எல்கர் 55, அணித்தலைவர் பப் டு பிளெஸி 41 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால் நான்கு விக்கெட்டுகளையும், லஹிரு குமார, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் 110 ஓட்டங்களுடன் சுருண்டிருந்தது. துடுப்பாட்டத்தில், இலங்கையணி சார்பாக, உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 26, டிமுத் கருணாரட்ன 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கஜிஸ்கோ றபடா, வேர்ணன் பிலாந்தர் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக, தென்னாபிரிக்க அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், டீன் எல்கர் 129, குயின்டன் டி கொக் 101 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .