2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தம்மிக பிரசாத்துக்கு பதில் விஷ்வ பெர்னாண்டோ

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கைக்கான குழாமில் இடம்பெற்றிருந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் தம்மிக பிரசாத்துக்கு பதிலாக, இதுவரையில் இலங்கையணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத விஷ்வ பெர்னாண்டோ குழாமில் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிராக இலங்கையணி விளையாடிய பயிற்சிப்போட்டியில் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த தம்மிக பிரசாத், முதுகுப் பகுதியில் காயமடைந்திருந்தார்.

கடந்தாண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராகவும், பங்களாதேஷிலும், இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமில் விஷ்வ பெர்னாண்டோ இடம்பெற்றிருந்த போதும், அவர் அணியில் இடம்பிடித்திருக்கவில்லை. நியூசிலாந்து ஏ அணிக்கெதிராக இடம்பெற்ற இரண்டு உத்தியோபற்றற்ற டெஸ்ட் போட்டிகளில் ஜெப்ரி வன்டர்ஸேக்கு அடுத்ததாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்த தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர்களில் இரண்டாமிடத்தை பெற்றதோடு, இலங்கையின் முதற்தரப் போட்டித் தொடரான பிறிமியர் லீக் தொடரின் 2014-15 பருவகாலத்தின் ஒன்பது போட்டிகளில் பங்குபற்றி 21.97 என்ற சராசரியில் 40 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, கடந்தாண்டில் இலங்கையணி சார்பாக சிறப்பாக செயற்பட்டிருந்த தம்மிக பிரசாத் காயமடைந்தமை, இலங்கையணிக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நியூசிலாந்துக்கெதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான குழாமிலும் தம்மிக பிரசாத் இடம்பெற்றுள்ளபோதும், அவர் அந்தப் போட்டிகளுக்கிடையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படவில்லை. டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமில் மட்டுமே விஷ்வ பெர்னாண்டோ பெயரிடப்பட்ட போதும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கும் இவரை குழாமில் வைத்திருப்பதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .