Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015-16 பருவகால ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளுக்கான தமிழ்நாடு அணியின் பந்துவீச்சுப் பயிற்றுநராக, அவ்வணியின் வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எனினும், வீரராகவும் அவர் தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்படுகிறது.
கடந்த பருவகாலத்தில், 8 போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றிய லக்ஷ்மிபதி பாலாஜி, 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். இம்முறையும் கூட, அவ்வாறு, குறைந்த போட்டிகளில் மாத்திரமே அவர் பங்குபற்றுவார் எனத் தெரிவிக்கப்படுவதோடு, சில வேளைகளில் அவர் விளையாடாமல் போகக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதாகக் கருதப்படுகிறது.
33 வயதான லக்ஷ்மிபதி பாலாஜி, இந்தியாவுக்கான 8 டெஸ்ட், 30 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 5 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளதோடு, இறுதியாக 2012ஆம் ஆண்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago