Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 30 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், இன்று ஹம்பாந்தோட்டையில் iறு நடைபெற்றா தம்புள்ள வைக்கிங்ஸை அணித்தலைவர் திஸர பெரேராவின் அதிரடியால் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் வீழ்த்தியது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தம்புள்ளையின் அணித்தலைவர் தசுன் ஷானகவால் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஜஃப்னா ஸ்டாலியன்ஸ், அவிஷ்க பெர்ணான்டோ, டொம் மூர்ஸ், மினோத் பானுகவை லஹிரு குமார, ரமேஷ் மென்டிஸ், அன்வர் அலியிட்டம் இழந்து தடுமாறியது.
பின்னர் ஷொய்ப் மலிக்கின் 23 (13), தனஞ்சய டி சில்வாவின் 16 (12) ஓட்டங்களால் சற்று ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் மீண்டபோதும் இவர்கள் இருவரையும் சமித் பட்டேலிடம் இழந்தது.
எனினும், சத்துரங்க டி சில்வாவின் 29 (24), திஸர பெரேராவின் ஆட்டமிழக்காத 97 (44), வனிடு ஹஸரங்கவின் 24 (10) ஓட்டங்களால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களை ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் பெற்றது.
பதிலுக்கு, 219 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை, நிரோஷன் டிக்வெல்லவின் 20 (11) ஓட்டங்கள் மூலம் வேகமாக ஆரம்பித்தபோதும், அவர், போல் ஸ்டேர்லிங்க், உப்புல் தரங்கவை உஸ்மான் ஷின்வாரி, பினுர பெர்ணான்டோ, திஸர பெரேராவிடம் இழந்து தடுமாறியது.
பின்னர் சமித் பட்டேலின் 41 (22), தசுன் ஷானகவின் 35 (21), அன்வர் அலியின் 21 (13) ஓட்டங்கள் மூலம் விரைவாக ஓட்டங்கள் பெறப்பட்டபோதும் இவர்கள் முறையே வனிடு ஹஸரங்க, உஸ்மான் ஷின்வாரி, பினுர பெர்ணான்டோவிடம் விழுந்ததோடு இறுதியில் திஸர பெரேரா, டுவன்னே ஒலிவியர், உஸ்மா ஷின்வாரியிடம் மேலும் தலா ஒவ்வொரு விக்கெட்டைப் பறிகொடுத்து 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று 66 ஓட்டங்களால் தம்புள்ளை தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக திஸர பெரேரா தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago