2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தரிந்து கௌஷால் மீது குற்றச்சாட்டு

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷாலின் பந்துவீச்சு முறையில் சந்தேகங்கள் காணப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 14 நாட்களுக்குள் அவரது பந்துவீச்சைச் சோதிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே, அவரது பந்துவீச்சுத் தொடர்பான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் கையளிக்கப்பட்ட போட்டி மத்தியஸ்தரின் அறிக்கையிலேயே, கௌஷாலின் பந்துவீச்சுத் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை சார்பாக இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள தரிந்து கெஷால், 2 ஐந்து-விக்கெட் பெறுதிகள், 1 நான்கு-விக்கெட் பெறுதி ஆகியவற்றுடன் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தவிர, ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்றிலும் அவர் பங்குபற்றியுள்ளார்.

அவரது பந்துவீச்சுச் சோதனை இடம்பெற்று, அதன் முடிவுகள் வெளிவரும்வரை, சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்கு அவருக்கு அனுமதியுண்டு. எனினும், இலங்கை அணி 6 வாரங்களுக்குச் சர்வதேசப் போட்டிகளெவற்றிலும் பங்குபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பாக சர்வதேசப் போட்டிகளில் இறுதியாக சச்சித்திர சேனநாயக்கவே பந்தை வீசியெறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தடை விதிக்கப்பட்டதோடு, அவரது பந்துவீச்சு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .