Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலில் ஹெய்ன்றிச் கிளாசென் இடம்பெறாத நிலையில் அவரது சர்வதேச போட்டிகளில் விளையாடும் எதிர்காலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.
டெஸ்ட்களிலிருந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற 33 வயதான கிளாசென், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான ஒப்பந்தத்தை கடந்த முறை கொண்டிருந்தார்.
இந்நிலையில் கிளாசெனின் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறுவதாகவும், இறுதி முடிவு எட்டப்படுமென கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை டேவிட் மில்லர், றஸி வான் டர் டுஸன் ஆகியோர் குறிப்பிட்ட இருதரப்புத் தொடர், சர்வதேச கிரிக்கெட் சபைத் தொடர்களில் பங்கேற்கும் கலப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago