Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 30 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரின் ஐந்தாவது போட்டி, கேப் டெளணில் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2-2 என சமநிலையில் இத்தொடர் தற்போது காணப்படுகின்ற நிலையில், இப்போட்டி தீர்மானமிக்கதாக அமைகின்றது. அத்துடன் இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் தற்போது நான்காமிடத்தில் காணப்படும் தென்னாபிரிக்கா, மூன்றாமிடத்தில் காணப்படும் நியூசிலாந்தை பின்தள்ளி மூன்றாமிடத்துக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில், டெஸ்ட் தொடரில் 3-0 என தென்னாபிரிக்காவால் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை வென்று பரிகாரம் தேடமுடியுமென்ற நிலையில், அவ்வணியின் பந்துவீச்சாளர்களும் துடுப்பாட்டவீரர்களும் அதற்கு உறுதுணையாக உள்ளனர்.
ஆக, பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களான ஷகீன் ஷா அவ்ரிடி, ஷடாப் கான் உள்ளிட்டவர்களை தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டவீரர்கள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்கள் என்பதிலேயே தொடரை யார் வெல்வது என்பது தீர்மானிக்கப்படப் போகின்றது.
இதுதவிர, பாகிஸ்தானின் இளம் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் இமாம்-உல்-ஹக், பாபர் அஸாம் ஆகியோர் இத்தொடரில் சிறப்பாக செயற்பட்டுள்ள நிலையில் அவர்களின் தொடர்ச்சியான இன்னொரு பெறுபேறு பாகிஸ்தானுக்கு தொடரை வழங்கலாம்.
தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரையில், இவ்வாண்டு உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில் அவ்வணியின் துடுப்பாட்டம் சிறப்பானதாகக் காணப்படவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் அணித்தலைவர் பப் டு பிளெஸி, நீண்ட இனிங்ஸொன்றை விளையாட வேண்டிய தேவையொன்று காணப்படுவதுடன், இத்தொடரில் பிரகாசித்த றஸி வான் டர் டுஸன், றீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரும் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இது தவிர, குயின்டன் டி கொக், டேவிட் மில்லர் ஆகியோர் விரைவாக ஓட்டங்கள் பெறும் நிலைக்குத் திரும்ப வேண்டும்.
பந்துவீச்சுப் பக்கம், குழாமுக்கு வெளியே கிறிஸ் மொறிஸ் போன்ற திறமையான வீரர்கள் வெளியேயுள்ள நிலையில், கஜிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹீர் தவிர்த்து அணியில் இடம்பெறப் போராடும் டுவன்னே ஒலிவர், பெயுரான் ஹென்ட்றிக்ஸ், தப்ரையாஸ் ஷம்சி ஆகியோரிடமிருந்து சிறப்பான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago