Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், செஞ்சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, லோகேஷ் ராகுலின் 123, மாயங்க் அகர்வாலின் 60, அஜின்கியா ரஹானேயின் 48, அணித்தலைவர் விராட் கோலியின் 35 ஓட்டங்களோடு முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், லுங்கி என்கிடி 6, ககிஸோ றபாடா 3, மார்கோ ஜன்சன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தெம்பா பவுமா 52, குயின்டன் டி கொக் 34, ககிஸோ றபாடா 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஷமி 5, ஜஸ்பிரிட் பும்ரா 2, ஷர்துல் தாக்கூர் 2, மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களை இந்தியா பெற்றது. துடுப்பாட்டத்தில், றிஷப் பண்ட் 34, லோகேஷ் ராகுல் 23, அஜின்கியா ரஹானே 20, விராட் கோலி 18, செட்டேஸ்வர் புஜாரா 16, இரவிச்சந்திரன் அஷ்வின் 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ககிஸோ றபாடா 4, மார்கோ ஜன்சன் 4, லுங்கி என்கிடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது இரண்டாவது இனிங்ஸில் 305 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்று 113 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் டீன் எல்கர் 77, தெம்பா பவுமா ஆட்டமிழக்காமல் 35, குயின்டன் டி கொக் 21, கீகன் பீற்றர்சன் 17, மார்கோ ஜன்சன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 3, மொஹமட் ஷமி 3, மொஹமட் சிராஜ் 2, இரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக லோகேஷ் ராகுல் தெரிவானார்.
26 minute ago
41 minute ago
43 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
41 minute ago
43 minute ago
44 minute ago