Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 08 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனம் 44வது தடவையாக நடத்திய தேசிய ஸ்குவாஷ் போட்டி இலங்கை விமானப்படை முகாம் இரத்மலானை ஸ்குவாஷ் வளாகத்தில் ஜனவரி 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நடைபெற்றது.
புதிய ஆண்கள் மற்றும் பெண்கள், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட வல்லுநர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட நிபுணர்கள், ஆண்கள் கேடயம் போட்டி, பெண்கள் மற்றும் ஆண்கள் ஓபன் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் உள்ளூர் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். .
ரவீது லக்சிறி மற்றும் ஷமில் வக்கீல் ஆகியோர் ஆடவர் திறந்த ஆண்கள் மற்றும் திறந்த பெண்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் ரவிடு லக்சிறி 03க்கு 0 என்ற புள்ளிக்கணக்கில் தொடர்ந்து 12ஆவது தடவையாகவும், மகளிர் பிரிவில் சனித்மா சினலி 03க்கு 1 என்ற புள்ளிக்கணக்கிலும் சம்பியன் பட்டத்தை வென்றனர்.
தேசிய ஸ்குவாஷ் தெரிவுக்குழு உறுப்பினர் விங் கமாண்டர் நளின் ஜயதிலக மற்றும் YETI நிறுவனத்தின் பணிப்பாளர் திஷான் பாலசூரிய, தேசிய ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவர் தம்மிக்க விஜேசுந்தர, இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவர் துணைத் தலைவர் மற்றும் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் குரூப் கேப்டன் எரந்த கிகனகே ஆகியோரும் பிரசன்னமாய் இருந்தனர்.
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago