Shanmugan Murugavel / 2021 ஜூன் 13 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
பேர்மிங்ஹாமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டை இன்று வென்றமையைத் தொடர்ந்தே, 1-0 என தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, டான் லோரன்ஸ் ஆட்டமிழக்காமல் 81, றோறி பேர்ண்ஸ் 81, மார்க் வூட் 41, ஒலி ஸ்டோனின் 20 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 303 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் பெற்றது. பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4, மற் ஹென்றி 3, அஜாஸ் பட்டேல் 2, நீல் வக்னர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, வில் யங் 82, டெவோன் கொன்வே 80, றொஸ் டெய்லரின் 80 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 388 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஸ்டூவர்ட் ப்ரோட் 4, மார்க் வூட் 2, ஒலி ஸ்டோன் 2, ஜேம்ஸ் அன்டர்சன் 1, டான் லோரன்ஸ் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, மற் ஹென்றி 3, நீல் வக்னர் 3, ட்ரெண்ட் போல்ட் 2, அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு, 38 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, இரண்டு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலைக்கையடைந்தது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago