Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, ஹமில்டனில் புதன்கிழமை (29) நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமெனத் தெரிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜேக்கப் டஃபி, ஸகரி போக்ஸ், பிளையர் டிக்னர் (4), நாதன் ஸ்மித் (2), சான்ட்னெர், மிஷெல் பிறேஸ்வெல்லிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 36 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களையே பெற்றது. ஜேமி ஒவெர்ட்டன் 42 (28), அணித்தலைவர் ஹரி ப்றூக் 34 (34), ஜோ றூட் 25 (34) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டரைல் மிற்செல்லின் ஆட்டமிழக்காத 56 (59), றஷின் றவீந்திரவின் 54 (58), சான்ட்னெரின் ஃஆட்டமிழக்காத 34 (17) ஓட்டங்களுடன் 33.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. ஜொஃப்ரார் ஆர்ச்சர் 3, அடில் ரஷீட் மற்றும் ஒவெர்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக டிக்னர் தெரிவானார்.
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026