Shanmugan Murugavel / 2021 மே 03 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கு எதிரான தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்த நிலையில், பல்லேகலவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியை இலங்கை வென்ற நிலையிலேயே, தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.
இன்றைய ஐந்தாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 177 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ், எஞ்சிய விக்கெட்டுகளையும் பிரவீன் ஜெயவிக்கிரம, தனஞ்சய டி சில்வா, ரமேஷ் மென்டிஸிடம் பறிகொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களையே பெற்று 209 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், முஷ்பிக்கூர் ரஹீம் 40, மெஹிடி ஹஸன் மிராஸ் 39, சைஃப் ஹஸன் 34, அணித்தலைவர் மொமினுல் ஹக் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜெயவிக்கிரம 5, ரமேஷ் மென்டிஸ் 4, தனஞ்சய டி சில்வா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஜெயவிக்கிரமவும், தொடரின் நாயகனாக இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் தெரிவாகினர்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 493/7 (துடுப்பாட்டம்: லஹிரு திரிமான்ன 140, திமுத் கருணாரத்ன 118, ஒஷாத பெர்ணான்டோ 81, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 77, ரமேஷ் மென்டிஸ் 33, பதும் நிஸங்க 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 4/127, தஜியுல் இஸ்லாம் 1/83, ஷொரிஃபுல் இஸ்லாம் 1/91, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/118)
பங்களாதேஷ்: 251/10 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 92, மொமினுல் ஹக் 49, முஷ்பிக்கூர் ரஹீம் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரவீன் ஜெயவிக்கிரம 6/92, ரமேஷ் மென்டிஸ் 2/86, சுரங்க லக்மால் 2/30)
இலங்கை: 194/9 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 66, தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 5/72, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/66, சைஃப் ஹஸன் 1/22, தஸ்கின் அஹ்மட் 1/26)
பங்களாதேஷ்: 227/10 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 40, மெஹிடி ஹஸன் மிராஸ் 39, சைஃப் ஹஸன் 34, மொமினுல் ஹக் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரவீன் ஜெயவிக்கிரம 5/86, ரமேஷ் மென்டிஸ் 4/103, தனஞ்சய டி சில்வா 1/19)
போட்டியின் நாயகன்: பிரவீன் ஜெயவிக்கிரம
தொடரின் நாயகன்: திமுத் கருணாரத்ன
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago