Shanmugan Murugavel / 2021 ஜூலை 19 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பங்களாதேஷ், ஹராரேயில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 240/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெஸ்லே மட்ஹெவெரே 56 (63), பிரெண்டன் டெய்லர் 46 (57), டியோன் மையர்ஸ் 34 (59), சிகண்டர் ராசா 30 (44), றெஜிஸ் சகப்வா 26 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொரிஃபுல் இஸ்லாம் 4/46, ஷகிப் அல் ஹஸன் 2/42, தஸ்கின் அஹ்மட் 1/38, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/34, மொஹமட் சைஃபுடீன் 1/54)
பங்களாதேஷ்: 242/7 (49.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் ஆ.இ 96 (109), மொஹமட் சைஃபுடீன் ஆ.இ 28 (34), மகமதுல்லா 26 (35), லிட்டன் தாஸ் 21 (33), தமிம் இக்பால் 20 (34), அஃபிப் ஹொஸைன் 15 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுக் ஜொங்வி 2/46, பிளஸிங்க் முஸர்பனி 1/31, றிச்சர்ட் நகரவா 1/33, வெஸ்லே மட்ஹெவெரே 1/39, சிகண்டர் ராசா 1/33)
போட்டியின் நாயகன்: ஷகிப் அல் ஹஸன்
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago