Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 08 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான குழாமிலும் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெறவில்லை.
இதேவேளை, 24 பேர் கொண்ட குறித்த குழாமில் அறிமுக சகலதுறை வீரர்களான தனஞ்சய லக்ஷனும், சரித் அஸலங்கவும், இஷான் ஜயரத்னவும் இடம்பெற்றதுடன், டெஸ்ட் போட்டியில் அண்மையில் அறிமுகத்தை மேற்கொண்ட சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவிக்கிரமவும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப்பும், துடுப்பாட்டவீரர் அவிஷ்க பெர்ணான்டோவும் குழாமுக்குத் திரும்பியுள்ள நிலையில், துடுப்பாட்டவீரர் அஷேன் பண்டார குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: குஷல் பெரேரா, குஷல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக, அவிஷ்க பெர்ணான்டோ, பதும் நிஸங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, ஒஷாத பெர்ணான்டோ, சரித் அஸலங்க, தசுன் ஷானக, வனிடு ஹஸரங்க, ரமேஷ் மென்டிஸ், சாமிக கருணாரத்ன, தனஞ்சய லக்ஷன், இஷான் ஜயரத்ன, துஷ்மந்த சமீர, இசுரு உதான, அசித பெர்ணான்டோ, நுவான் பிரதீப், பினுர பெர்ணான்டோ, ஷிரான் பெர்ணான்டோ, லக்ஷன் சந்தகான், அகில தனஞ்சய, பிரவீன் ஜெயவிக்கிரம.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025