Editorial / 2025 டிசெம்பர் 14 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜான் சீனா. 'தி சூசைட் ஸ்குவாட்', 'ப்ரீலான்ஸ்' உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஜான் சீனாவின் என்ட்ரி இசை பலரது ரிங்டோனாக இருந்தது. இவர் WWE மல்யுத்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
WWE ஜாம்பவான்களான ராக், டிரிபிள் எச், ரேண்டி ஆர்ட்டன், அண்டர்டேக்கர் உள்ளிட்டோருடன் ஜான் சீனா மோதியுள்ளார். 23 ஆண்டுகளாக WWE மல்யுத்த போட்டிகளில் அசத்தி வந்த ஜான் சீனா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். அமெரிக்காவில் டிசம்பர் 13-ந்தேதி நடைபெறும் போட்டிதான் தனது கடைசி போட்டி என்று கூறியிருந்தார்.
டிசம்பர் 14காலை 6.30 மணிக்கு இந்த போட்டியின் நேரலை ஒளிபரப்பானது. அதன்படி தனது கடைசி போட்டியில் ஜான் சீனா, கன்தர் உடன் மோதினார். இந்த போட்டியில் டேப் அவுட் முறையில் ஜான் சீனா தோல்வியை தழுவினார்.
இதைத் தொடர்ந்து தோல்வியுடன் ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை WWE நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பினர்.
அடுத்த கட்டமாக ஜான் சீனா தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago