2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தோல்வியைத் தவிர்த்த இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்டில் தோல்வியை இங்கிலாந்து தவிர்த்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் சிட்னியில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, உஸ்மான் கவாஜாவின் 137, ஸ்டீவ் ஸ்மித்தின் 67, மார்க்கஸ் ஹரிஸின் 38, மிற்செல் ஸ்டார்க்கின் ஆட்டமிழக்காத 34, டேவிட் வோணரின் 30, மர்னுஸ் லபுஷைனின் 28, அணித்தலைவர் பற் கமின்ஸீன் 24, நேதன் லையனின் ஆட்டமிழக்காத 16 ஓட்டங்களோடு 8 விக்கெட்டுகளை இழந்து 416 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், ஸ்டூவர்ட் ப்ரோட் 5 மற்றும் ஜேம்ஸ் அன்டர்சன், மார்க் வூட், அணித்தலைவர் ஜோ றூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜொனி பெயார்ஸ்டோவின் 113, பென் ஸ்டோக்ஸின் 66, மார்க் வூட்டின் 39 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஸ்கொட் போலண்ட் 4, லையன் 2, கமின்ஸ் 2, ஸ்டார்க் 1, கமரொன் கிறீன் 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 6 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், கவாஜா ஆட்டமிழக்காமல் 101, கிறீன் 74, லபுஷைன் 29, ஹரிஸ் 27, ஸ்மித் 23 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேக் லீச் 4, வூட் 2 விக்கெட்டுகளக் கைப்பற்றினர்.

இதேவேளை, 388 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, நேற்றைய ஐந்தாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், ஸக் குறோலி 77, ஸ்டோக்ஸ் 60, பெயார்ஸ்டோ 41, லீச் 26, றூட் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், போலண்ட் 3, கமின்ஸ் 2, லயோன் 2, கிறீன் 1, ஸ்மித் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக கவாஜா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .