Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலன டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இடம்பெற்ற நாக்பூர் ஆடுகளத்துக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடுகளத்தை, 'மோசமானது" என, போட்டி மத்தியஸ்தர் ஜெப் குரோவ் வழங்கிய அறிக்கையை, சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட்டுக்கான பொது முகாமையாளர் ஜெப் அலர்டைஸ், பிரதம போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்லே இருவரும், இந்த முடிவுக்கு வந்தனர்.
போட்டி மத்தியஸ்தரின் அறிக்கை, போட்டியின் பதிவுசெய்யப்பட்ட காணொளி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பதில் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
14 minute ago
23 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
53 minute ago
1 hours ago