Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளில், மூன்றாம் நடுவர் நைஜல் லோங், தவறான தீர்ப்பை வழங்கினாரென, சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஸ்லிப்ஸ் திசையில் பிடிக்கப்பட்ட பந்து, ஆட்மிழப்பில்லையென கள நடுவர் எஸ். ரவி தெரிவிக்க, தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம் மூலமாக, அத்தீர்ப்புக்கெதிராக நியூசிலாந்து முறையீடு செய்தது. அதில், துடுப்பில் பந்து பட்டமைக்கான ஹொட் ஸ்பொட் ஆதாரம் காணப்பட்ட போதிலும், ஒலிச் சமிக்ஞையில் அவ்வாறான ஆதாரம் காணப்படவில்லையெனத் தெரிவித்து, தீர்ப்பை மாற்றுவதற்கு லோங் மறுத்திருந்தார்.
எனினும், குறித்த தீர்ப்பை மீள்பரிசீலனை செய்ததாகவும், அதில், சரியான படிமுறைகளை லோங் பின்பற்றிய போதும், இறுதியாக வழங்கப்பட்ட தீர்ப்பு தவறானது எனவும், சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago