2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நெதர்லாந்து அணியிலிருந்து வான்பேர்சி, டிபே நீக்கம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 03 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 13ஆம் திகதி காடிப் சிற்றி அரங்கில் இடம்பெறவிருக்கும் வேல்ஸ் அணிக்கெதிரான சிநேகபூர்வப் போட்டியில் பங்கேற்கவிருக்கும் நெதர்லாந்து குழாமிலிருந்து ரொபின் வான் பேர்சியும் மெம்பிஸ் டிபேயும் நீக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி கால்பந்தாட்டக் கழகமான பெனர்பாச்சேயின் முன்கள வீரரான 32 வயதான ரொபின் வான் பேர்சி, தனது கழகத்துக்காக 16 போட்டிகளில் ஐந்து கோல்களையே பெற்றதோடு, இங்கிலாந்து கால்பந்தாடக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்கள வீரரான 21 வயதான டிபே, தனது கழகத்துக்காக 19 போட்டிகளில் நான்கு கோல்களை மட்டுமே பெற்றிருந்தார்.

கால்பந்தாடத்தில், நீங்கள் அணியில் செயற்படவேண்டும், ஆனால் டிபே தொடர்ந்து அதைச் செய்யவில்லை என தெரிவித்துள்ள நெதர்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் டனி பிளைன்ட், அவர் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை நெதர்லாந்து சார்பாக 101 போட்டிகளில் பங்குபற்றி அதிகமாக 50 கோல்களைப் பெற்ற வான் பேர்சி, சரியாக விளையாடுகிறார் என்று தான் நினைக்கவில்லை என பிளைன்ட் மேலும் தெரிவித்தார்.

தமது குழு நிலைப் போட்டிகளில் நான்காமிடத்தை பெற்று, யூரோ 2016 கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியிருந்த நெதர்லாந்து அணி, காயத்திலிருந்து மீண்ட அணித்தலைவர் ஆர்ஜன் ரொபினை மீண்டும் குழாமில் இணைத்துக் கொண்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .