2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நான் குத்துச்சண்டையிலிருந்து விலகலாம்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஸகஸ்தானைச் சேர்ந்த 39 வயதான முன்னாள் உலக குத்துச்சண்ட சம்பியயனான விளாடிமிர் கிளிட்ச்கோவுடன் மீண்டும் மோதுவது தொடர்பில் முடிவு செய்யவில்லை எனவும் குத்துச்சண்டையிலிருந்து விலகலாம் எனவும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த இருபத்தேழு வயதான, உலக அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனான டைசன் பியூரி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற போட்டியில், விளாடிமிர் கிளிட்ச்கோவை தோற்கடித்து, உலக குத்துச்சண்டை சங்க, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன, உலக குத்துச்சண்டை கூட்டமைப்பு படங்களை டைசன் பியூரி வென்றிருந்ததுடன் மீண்டும் எதிர்வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையிலேயே, தான் ஊக்கத்தைப் பெறுவது கடினமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். நான், வெளியேறலாம் என்றும் சூரிய அஸ்தமனத்தில் எந்தவிதப் போட்டிகளிலிலும் தோல்வியடையாது செல்ல முடியும் என்றும் சாதாரண வாழ்க்கையை வாழமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

பணத்துக்காக, நான் குத்துச்சண்டையில் ஈடுபடமுடியும் எனத் தெரிவித்த டைசன் பியூரி, ஆனால், விளையாட்டு எப்போதும் பணமாகக்கூடாது என தான் எப்போதும் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் படங்களை வெல்வதில் ஆர்வமில்லையென்றும் தனது இளம் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதாக டைசன் பியூரி தெரிவித்துள்ளார்.

தான் குத்துச்சண்டை வளைய பயிற்சிக்கு இன்னும் திரும்பவில்லையென்றும் பாரங்களை தூக்குவதாகவும் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்தியகிழக்கு நாடுகளான டுபாய், கட்டாரில் கிளிட்ச்கோவுடன் மோதுவதற்கான இரண்டு அதிக பணங்களுடன் கூடிய வாய்ப்பு வந்ததாகவும் அதனை நிராகரித்ததாகவும் பியூரி தெரிவித்துள்ளார். இதில், ஒரு மோதலில், எந்தவொரு தொலைக்காட்சி கமெரா, வானொலி வர்ணிப்பாளர்கள், இணையத்தளங்கள், பத்திரிகை நிரூபர்கள் இல்லாமல் 120 நண்பர்கள் மட்டுமே உள்ள போட்டியொன்று எனவும் அதில் இருக்கும் ஒவ்வொரு நண்பரும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தருவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .