Shanmugan Murugavel / 2016 நவம்பர் 14 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட 7.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், அங்கு நடத்தப்படத் திட்டமிடப்படவுள்ள டெஸ்ட் போட்டி, இடம்பெறுமெனவே எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கும் பாகிஸதானுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, எதிர்வரும் 17ஆம் திகதி, கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ளது. இப்போட்டி இடம்பெறுமா என்றே சந்தேகம் வெளியிடப்பட்டது.
நெல்சனில் தங்கியுள்ள பாகிஸ்தான் அணி, நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், முதலாவது டெஸ்ட் போட்டிக்காக அவர்கள் தயாராகவுள்ளார்கள். அணியின் பாதுகாப்புக் குறித்து, நியூசிலாந்து கிரிக்கெட் சபையால் உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் வசீம் பாரி தெரிவித்தார்.
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியும், நியூசிலாந்திலேயே உள்ள நிலையில், அவர்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். அவர்களும் பாதுகாப்பாக உள்ள போதிலும், இன்னமும் பயந்த நிலையிலேயே அவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago