2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

நியூசிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் நாளை

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 16 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

பலமான அணியாகக் கருதப்பட்ட நியூசிலாந்து அணி, இந்தியாவில் வைத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை, 0-3 என்ற கணக்கில் இழந்திருந்தது. மறுபக்கமாக பாகிஸ்தான் அணி, 2014ஆம் ஆண்டு ஓகஸ்டுக்குப் பின்பு, டெஸ்ட் தொடரொன்றில் தோல்வியடையாத தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்கள் கிடைக்கப்பெறும் நியூசிலாந்து ஆடுகளங்களில், இரு அணிகளிலும் காணப்படும் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள், கடுமையான போட்டியை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தொடரில் பங்குபற்றாத நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, இப்போட்டியில் பங்குபற்றுகின்றமை, நியூசிலாந்துக்குப் பலத்தை வழங்கும்.

எதிர்பார்க்கப்படும அணிகள்:

நியூசிலாந்து: ஜீட் றவல், டொம் லேதம், கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ், ஜேம்ஸ் நீஷம், பி.ஜே. வற்லிங், டொட் அஸ்டில், டிம் சௌதி, நீல் வக்னர், ட்ரென்ட் போல்ட்.

பாகிஸ்தான்: சமி அஸ்லாம், அஸார் அலி, அசத் ஷபீக், யுனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், பாபர் அஸாம், சப்ராஸ் அஹமட், வஹாப் றியாஸ், யாசீர் ஷா, மொஹமட் ஆமிர், சொஹைல் கான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .