Shanmugan Murugavel / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது.
பிறிஸ்பேணில் இடம்பெறவுள்ள இப்போட்டி, நாளை காலை 5.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.
மைக்கல் கிளார்க்கின் ஓய்வின் பின்னர், அவுஸ்திரேலியாவின் நிரந்தரத் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
அதேபோல், இரு அணிகளுமே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சந்தித்த பின்னர், மீண்டும் சந்திக்கவுள்ள முதற்தடவை இதுவாகும். எனவே, விறுவிறுப்பான போட்டியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு அணிகளுமே, தங்கள் விளையாடும் பதினொருவரை அறிவித்துள்ளன.
இதில், பீற்றர் சிடில், மற் ஹென்றி இருவருக்கும் இடம் கிடைக்காது போக, ஜொஷ் ஹேஸல்வூட், டக் பிறேஸ்வெல் இருவருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அணிகள்:
அவுஸ்திரேலியா: ஜோ பேர்ண்ஸ், டேவிட் வோணர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், மிற்சல் ஜோன்சன், மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன்.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டொம் லதம், கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர், பிரென்டன் மக்கலம், ஜிம்மி நீஷம், பி.ஜே வற்லிங், மார்க் கிறெய்க், டக் பிறேஸ்வெல், டிம் சௌதி, ட்ரென்ட் போல்ற்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago