Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், முன்னாள் முதல்நிலை வீரரான ரபேல் நடாலை இலகுவாக வீழ்த்தி, சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியனாகத் தெரிவானார்.
அண்மைக்காலமாகவே போட்டிகளை வெல்வதற்குத் தடுமாறிவரும் ரபேல் நடால், இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்த நிலையில், அண்மைக்கால பெறுபேறுகளை மாற்றியமைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இது கருதப்பட்டது.
முதலாவது செட்டின் முதலாவது புள்ளியை அவர் பெற்றுக் கொண்ட போதிலும், உடனடியாகவே 1-1 என்ற சமநிலையை ஜோக்கோவிச் பெற்றுக் கொண்டார்.
ஆனால், அதனைத் தொடர்ந்து, ரபேல் நடாலின் காலில் ஏற்பட்ட சிறிய உபாதை காரணமாக, மைதானத்தில் வைத்து அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச், 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் முதலாவது செட்டைக் கைப்பற்றினார்.
அடுத்த செட்டிலும் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச், அதனையும் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, சம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம், இறுதி 4 சம்பியன் பட்டங்கள் உள்ளடங்கலாக, சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி 7 தொடர்களில் 6 தொடர்களை ஜோக்கோவிச்சே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago