2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நடப்புச் சம்பியனை வென்ற தியெம்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 16 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், நேற்றிரவு நடைபெற்ற குழுநிலைப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை உலகின் மூன்றாம்நிலை வீரரான டொமினிக் தியெம் வென்றார்.

உலகின் ஆறாம்நிலை வீரரான கிரேக்கத்தின் சிட்டிபாஸை 7-6 (7-5), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஒஸ்திரியாவின் தியெம் வென்றிருந்தார்.

இதேவேளை, இன்று அதிகாலை நடைபெற்ற இன்னொரு குழுநிலைப் போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் எட்டாம்நிலை வீரரான ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்வை உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால் வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X