2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நியூசிலாந்துக் குழாமில் ஹென்றி, பெர்கியூசன்

Mithuna   / 2024 ஜனவரி 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் காயத்திலிருந்து குணமடைந்த மற் ஹென்றி, லொக்கி பெர்கியூசன் மற்றும் ஓய்வளிக்கப்பட்டிருந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன், டெவோன் கொன்வே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் இறுதி மூன்று போட்டிகளுக்கான குழாம்களிலேயே பெர்கியூசன் இடம்பெற்றுள்ளதோடு, தொடரின் மூன்றாவது போட்டிக்கான குழாமில் வில்லியம்சன் இடம்பெறவில்லை. அப்போட்டியில் நியூசிலாந்துக்கு மிற்செல் சான்ட்னெர் தலைமை தாங்கவுள்ளார். குழாமில் அப்போட்டிக்காக ஜொஷ் கிளார்க்சன் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை றஷின் றவீந்திரவுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

குழாம்: பின் அலென், டெவோன் கொன்வே (விக்கெட் காப்பாளர்), கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), மார்க் சப்மன், ஜொஷ் கிளார்க்சன், டரைல் மிற்செல், கிளென் பிலிப்ஸ், டிம் செய்ஃபேர்ட் (விக்கெட் காப்பாளர்), மிற்செல் சான்ட்னெர், லொக்கி பெர்கியூசன், மற் ஹென்றி, அடம் மில்ன், பென் சியர்ஸ், இஷ் சோதி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .