Editorial / 2017 நவம்பர் 15 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், விக்கெட் காப்பாளர் பி.ஜெ வட்லிங் இடம்பெற்றுள்ளபோதும் இடுப்புக் காயம் காரணமாக, வெலிங்டனில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகத்துக்கிடமானதொன்றாகவே காணப்படுகிறது. பி.ஜெ வட்லிங் விளையாடா விட்டால் டொம் பிளன்டெல் நியூசிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குழாம்: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்). ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிரான்ட்ஹொம், மற் ஹென்றி, டொம் லேதம், ஹென்றி நிக்கொல்ஸ், ஜீட் றாவல், மிற்செல் சான்ட்னெர், டிம் செளதி றொஸ் டெய்லர், நீல் வக்னர், பி.ஜெ வட்லிங்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago