Shanmugan Murugavel / 2024 நவம்பர் 09 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், தம்புள்ளயில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டுனித் வெல்லாலாகே (3), நுவான் துஷார (2), மகேஷ் தீக்ஷன, வனிது ஹசரங்க (2), மதீஷ பத்திரணவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸகாரி போக்கிஸ் ஆட்டமிழக்காமல் 27 (16), மிஷெல் பிறேஸ்வெல் 27 (24) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 136 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, அணித்தலைவர் சரித் அசலங்கவின் ஆட்டமிழக்காத 35 (28), கமிந்து மென்டிஸின் 23 (16), குசல் பெரேராவின் 23 (17), வனிது ஹசரங்கவின் 22 (23), பதும் நிஸங்கவின் 19 (14), டுனித் வெல்லலாகே ஆட்டமிழக்காத 11 (07) 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், போக்கிஸ் 3, கிளென் பிலிப்ஸ், மிற்செல் சான்ட்னெர், மிஷெல் பிறேஸ்வெல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக அசலங்க தெரிவானார்.
12 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago