2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பாகிஸ்தான் அபார வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஹராரேயில் ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 131 ஓட்டங்களால் சிம்பாப்வேயைத் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும், இமாட் வசிம் 61 ஓட்டங்களையும், சஃப்ராஸ் அகமட் 44 ஓட்டங்களையும், ஷோய்ப் மலிக் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக ஜோன் நைம்பு, லுக் ஜோங்க்வி, தினேஷே பணயங்காரா, கிரேமி கிரீமர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 37 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் சீன் வில்லியம்ஸ் 26 ஓட்டங்களையும், எல்டன் சிக்கும்புரா 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யாசிர் ஷா 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி பெறுதியைத் பதிவு செய்ததோடு, ஷோய்ப் மலிக் 3 விக்கெட்டுக்களையும், இமாட் வசீம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்

போட்டியின் நாயகனாக யாசிர் ஷா தெரிவானார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .