Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் உள்ளூர் இருபது-20 கிண்ண இறுதிப்போட்டிக்கு கராச்சி பகுதி புளூஸ் அணியும் பெஷாவார் பகுதி அணியும் தகுதி பெற்றுள்ளன. கராச்சி பகுதி புளூஸ் அணி, முல்தான் பகுதி அணியை தோற்கடித்தும், பெஷாவார் பகுதி அணி, சியால்கொட் அணியை தோற்கடித்துமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
கராச்சி பகுதி புளூஸ் அணிக்கும் முல்தான் பகுதி அணிக்குமிடையே இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கராச்சி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பாக பவத் அலாம், 42 பந்துகளில் 60 ஓட்டங்களையும், அசாத் ஷாஃபிக் 34 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முல்தான் அணி சார்பாக மஜீத் அலி, ரகாத் அலி தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முல்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 8 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆமிர் யமின் 20 பந்துகளில் 45 ஓட்டங்களையும், சொகைப் மஸ்கூத், 19 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அப்துல் அமீர் 3 விக்கெட்டையும், ரும்மான் ரயீஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சியால்கோட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. இதில் அதில் மலிக் 46 பந்துகளில் 70 ஓட்டத்தையும், முக்தார் அகமட் 24 பந்துகளில் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பெஷாவர் அணி சார்பாக அதில் அமின் 2 விக்கெட்டினை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெஷாவார் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில் ரபட்டுல்லா மொகமட் 51 பந்துகளில் 78 ஓட்டங்களையும், மொகமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அமாட் பட் 2 விக்கெட்டினை கைப்பற்றினார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago