Gopikrishna Kanagalingam / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

2ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், ஆர்ஜென்டினாவின் லியனார்டோ மேயரை 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இலகுவான நேர் செட் வெற்றியைப் பெற்றார். 3ஆம் நிலை வீரரான அன்டி மரே, அவுஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை, 7-5, 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.
5ஆம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்கா, ஸ்பெய்னின் அல்பேர்ட் றாமோஸ்-வினோலஸை எதிர்கொண்டு, 7-5, 6-4, 7-6 என்ற செட் கணக்கில வெற்றிபெற்றார். 6ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தோமஸ் பேர்டிச், 13ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜோன் இஸ்னெர், 28ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜக் சொக் ஆகியோரும் வெற்றிபெற்றனர்.
பெண்களுக்கான போட்டியில், 2ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சைமோனா ஹலெப், நியூசிலாந்தின் மரினா எராகோவிச்சுக்கெதிராக மோதி, 6-2, 3-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது மரினா, போட்டியிலிருந்து விலகி, சைமோனாவுக்கு வெற்றியை வழங்கினார்.
4ஆம் நிலை வீராங்கனையான கரோலின் வொஸ்னியாக்கி, அமெரிக்காவின் ஜேமி லோவப்பை, 6-2, 6-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டார். 5ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா க்விற்றோவா, ஜேர்மனியின் லாரா சியக்முன்ட்டை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.
11ஆம், 18ஆம் நிலை வீராங்கனைகளான ஜேர்மனியைச் சேர்ந்த அன்ஜெலிக் கேர்பெர், அன்ட்ரியா பெட்கோவிச் ஆகியோரும், 20ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின்
விக்டோரியா அஸரெங்காவும் வெற்றிபெற்றனர்.
அதிர்ச்சியான முடிவாக, 6ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் லூசி ச‡பரோவா, உக்ரேனைச் சேர்ந்த லேசியா சுரெங்காவிடம் 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago