Shanmugan Murugavel / 2015 நவம்பர் 23 , மு.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தில் தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வந்த உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச், உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரைத் தோற்கடித்து தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான சங்கத்தின் உலக தொடர் இறுதிகளில் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த இறுதிப் போட்டியில் ஜோக்கோவிச்சுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய பெடரர், முதலாவது செட்டில் அதிக தவறுகளைப் புரிந்தார், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜோக்கோவிச், போட்டியில் ஆதிக்கம் செலுத்தி முதலாவது செட்டை 6-3 என்ற ரீதியில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் போராட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் ஒரு கட்டத்தில் 3-3 என்ற நிலையை அடைந்தார். அப்போது போட்டி இடம்பெற்ற இலண்டன் O2 அரங்கில் கூடியிருந்த 17,800 பார்வையாளர்களில் பெரும்பான்மையோனோர் பெடரருக்கு ஆதரவாக குரலெழுப்பியிருந்தனர்.
எனினும் அதனை அமைதியுடன் அவதானித்துக்கொண்டிருந்த ஜோக்கோவிச், இரண்டாவது செட்டையும் 6-4 என்ற ரீதியில் கைப்பற்றி போட்டியை நேர் செட்களில் வென்றார்.
இதன் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குழு நிலைப் போட்டியில் பெடரரிடம் பெற்ற தோல்விக்கு ஜோக்கோவிச் பரிகாரம் தேடிக் கொண்டார்.
தவிர, இந்த வெற்றியின் மூலம், தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான சங்கத்தின் உலக தொடர் இறுதிகளில் நான்காவது முறையாக பட்டத்தை கைப்பற்றிய ஜோக்கோவிச், 1987ஆம் ஆண்டு இவான் லெண்டில் மூன்று முறை தொடர்ச்சியாக தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான சங்கத்தின் உலக தொடர் இறுதிகளில் வென்ற சாதனையை முறியடித்தார்.
மேலும், மொத்தமாக 5 தடவை தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான சங்கத்தின் உலக தொடர் இறுதிகளில் பட்டத்தை கைப்பற்றியுள்ள ஜோக்கோவிச், பீற்றர் சாம்ப்பிராஸ், இவான் லெண்டில் ஆகியோருடன் தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான சங்கத்தின் உலக தொடர் இறுதிகளில் அதிக முறை வென்றவர்கள் பட்டியலில் சமநிலையில் உள்ளார். ஆறு தடவைகள் இந்தப் பட்டத்தை கைப்பற்றிய பெடரர் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிண்ணம் தவிர, ஜோக்கோவிச்சுக்கு 1,300 தரவரிசைப் புள்ளிகளும் 1.4 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்கலும் கிடைத்திருந்தது.
இது தவிர, இந்தப் போட்டியில் பெடரை, ஜோக்கோவிச் வென்றதன் மூலம், இருவருக்குமிடையிலான மோதல்களில், தற்போது இருவரும் தலா 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago