Shanmugan Murugavel / 2016 ஜனவரி 03 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டுக்கான முபடாலா உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் சம்பியனாக, முன்னாள் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் தெரிவாகியுள்ளார்.
ஒற்றையர் போட்டிகள் மாத்திரம் இடம்பெறும் கண்காட்சி டென்னிஸ் தொடரான இத்தொடர், 2009ஆம் ஆண்டிலிருந்து, அபு தாபி சர்வதேச டென்னிஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இத்தொடரில் 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனாக அன்டி மரே காணப்பட்ட போதிலும், இம்முறை போட்டிகளில் அவர், பங்குபற்றியிருக்கவில்லை.
இறுதிப் போட்டியில் கனடாவின் மிலோஸ் றாவோனிக்கைச் சந்தித்த ரபேல் நடால், 7-6, 6-3 என்ற செட் கணக்கில், வெற்றிபெற்றார்.
2015ஆம் ஆண்டில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு, எதிர்பார்த்தளவு வெற்றிகளைப் பெற்றிருக்காத நடால், இவ்வருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளமை, அவருக்கான தன்னம்பிக்கையை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அiரையிறுதிப் போட்டிகளில், ஸ்டான் வவ்றிங்காவைத் தோற்கடித்து மிலோஸ் றாவோனிக்கும், சக நாட்டு வீரரான டேவிட் பெரரைத் தோற்கடித்து ரபேல் நடாலும், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago