2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

புதிய விதியால் சிக்கிய பொலார்ட்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 08 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கெரான் பொலார்ட், தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர், வெளிநாட்டு இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடும் போது, அவர்களது ஒப்பந்தத் தொகையில் 20 சதவீதத்தை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு வழங்க வேண்டுமென்ற நிபந்தனை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

கேப் கோப்ராஸ் அணிக்காக விளையாட எதிர்பார்த்த பொலார்ட், அந்தக் கொள்கையை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஏற்காததன் காரணமாகவே, சிக்கலில் மாட்டியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள், இன்னொரு நாட்டின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடர்களில் பங்குபற்றுவதற்கு, தனது நாட்டுக் கிரிக்கெட் சபையின் அனுமதிச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .