Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உயர்மட்ட பீபா அதிகாரிகள் சுவிஸ் ஹொட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் சில பீபா அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த சொகுசு போர் உ லக் ஹொட்டலிலேயே பொலிஸார், திடீரெனப் புகுந்து கைது செய்திருந்தனர்.
பீபாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பாக வாக்கெடுப்புக்கு செல்வதற்கான பீபாவினது நிறைவேற்றுச் சபையின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சூரிச்சில் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படிக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனமெடுப்பதாக தெரிவித்துள்ள பீபா, சுவிஸ் சட்டத்தின்படி அமெரிக்க விசாரணைக்கும் சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் இடம்பெறும் கால்பந்தாட்டா தொடர்களினதும் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளினதும் சந்தைப்படுத்தல் உரிமைகளை விற்பதற்காக பணம் பெற்றுக்கொண்டதாக நம்பப்படும் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான சுவிஸ் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
தவிர அமெரிக்காவின் விண்ணப்பத்தில் வேறு இரண்டு பீபா அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவ்வலுவலகம் தெரிவித்ததோடு, அவர்கள் அமெரிக்காவில் நாடுகடத்தப்படுவதற்காக காத்திருப்பதாவும் தெரிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago