Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை, 'அருவருப்பானவை" என வர்ணித்துள்ளார். ஆனால், 2018ஆம், 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணங்கள், வேறு இடங்களுக்கு மாற்றப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
பீபா தலைவர் செப் பிளட்டர், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் மைக்கல் பிளட்டினி இருவரும், 90 நாட்களுக்கு இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 2018ஆம், 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணங்களை முறையே ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்பது தொடர்பிலும், அவர்கள் மீதான விசாரணைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள பெக்காம், இடம்பெற்றுள்ள முறைகேடுகள், மிக அதிகமானவை எனவும், இவற்றைத் தீர்ப்பதற்கு அதிக காலமெடுக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
தன்னைப் பொறுத்தவரை, இந்த விளையாட்டானது, நடத்தப்படும் விதமும் பார்க்கப்படும் விதமும், பேரிடியாக அமைந்துள்ளதாகவும், இது அருவருப்பானது எனவும் தெரிவித்தார்.
அவ்விரு உலகக் கிண்ணங்களும் வழங்கப்பட்டதில், ஊழல் இடம்பெற்றிருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, அந்த நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்படக்கூடாது எனவும், பெக்காம் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago